குளியாபிட்டி பகுதியில் நான்கு புத்தர் சிலைகளின் தலைப் பகுதிகளை சேதப்படுத்திய இந்திய பிரஜையொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் பெண்ணொருவரை விவாகஞ்செய்துள்ள இந்நபர், சுற்றுலா விசாவில் வந்து தங்கியிருந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
17ம் திகதி இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னணியில் அப்பகுதியில் சிறு பதற்றம் நிலவியுள்ளதோடு குறித்த நபர் இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment