உண்மையான சூத்திரதாரியை தெரியப்படுத்துங்கள்: கார்டினல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 March 2021

உண்மையான சூத்திரதாரியை தெரியப்படுத்துங்கள்: கார்டினல்

 


ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையில் தமக்குத் திருப்தியில்லை என தெரிவிக்கின்ற கார்டினல் மல்கம் ரஞ்சித், உண்மையான சூத்திரதாரியை தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் அலட்சியமாக செயற்பட்ட உண்மையான சூத்திரதாரிகளை வெளியில் கொண்டு வருவது அரசின் பொறுப்பெனவும் தெரிவித்துள்ள அவர், அறிக்கை அதிருப்தியாக இருந்தால் சர்வதேச நீதிமன்றை நாடப் போவதாக முன்னர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தற்சமயம் குறித்த அறிக்கை தம்மைக் குற்றவாளியாகக் கண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஞானசாரவும் இன்னொரு புறத்தில் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment