கருப்பு ஞாயிறு: தேரர்களும் பங்கேற்பு! - sonakar.com

Post Top Ad

Sunday 7 March 2021

கருப்பு ஞாயிறு: தேரர்களும் பங்கேற்பு!

 


ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையின் மீதான அதிருப்தியை வெளியிடடு, சூத்திரதாரிகளை வெளிப்படுத்தத் தவறும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து கத்தோலிக்கர்களால் இன்று கருப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகிறது.


இப்பின்னணியில், கத்தோலிக்க தேவாலயங்களுக்கு இன்று வழிபாடுகளில் கலந்து கொள்வோரே கருப்பு நிற ஆடையணிந்து வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறே மக்கள் பல இடங்களில் கலந்து கொண்டுள்ளதுடன் கொழும்பு, கொச்சிகடை அந்தோனியார் தேவாலயம் முன்பாக கார்டினல் மெல்கம் ரஞ்சித்துடன் பௌத்த தேரர்களும் இணைந்து பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
திட்டமிட்டு தாக்குதல் நடாத்தி உயிர்களைப் பலி கொண்ட சூத்திரதாரிகள் யார்? நீதியை நிலை நாட்டு! போன்ற வாசகங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment