அடுத்த தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Thursday, 4 March 2021

அடுத்த தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை: ஜனாதிபதி

 


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடும் எண்ணமில்லையென பெரமுன கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சிறுபான்மை சமூகங்களின் வாக்கையும் பெறக்கூடிய ஒருவரை முன் நிறுத்த வேண்டும் எனவும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்குத் தாம் உறுதுணையாக இருக்க முடியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, சு.க - பெரமுன முறுகல் சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மீண்டும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment