தாயின் தற்கொலை முயற்சி: 3 குழந்தைகள் மரணம்! - sonakar.com

Post Top Ad

Thursday 4 March 2021

தாயின் தற்கொலை முயற்சி: 3 குழந்தைகள் மரணம்!

 


கிளிநொச்சி, வட்டகச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர், குடும்பப் பிரச்சினையின் பின்னணியில் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் 8,5 மற்றும் 2 வயது குழந்தைகள் உயிரிழந்துள்ள அதேவேளை மீட்கப்பட்ட தாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இரு பெண் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், 2 வயது கைக்குழந்தையும் தாயும் உயிருடன் காப்பாற்றப்பட்டிருந்த போதிலும் வைத்தியசாலையில் வைத்து குழந்தை மரணித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment