முதுகெலும்புள்ள 'தலைவர்' வேண்டும்: கார்டினல் விசனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 March 2021

முதுகெலும்புள்ள 'தலைவர்' வேண்டும்: கார்டினல் விசனம்!

 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தத் தவறியுள்ள நிலையில் அவ்வறிக்கை முழுமை பெறவில்லையென தெரிவிக்கிறார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.


நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் நிலவ வேண்டுமாக இருந்தால் முதுகெலும்புள்ள, நேர்மையான தலைவர் அவசியம் எனவும் அரசியல் இலாபங்களுக்காக குறுக்கு வழியில் பயணிப்பவர்களால் பயனில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பல உண்மைகள் வெளியாகியுள்ள போதிலும் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் தொடர்பில் தெளிவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமையும் நௌபர் மௌலவி என அறியப்படும் நபரே சூத்திரதாரியென சரத் வீரசேகர தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment