அரசின் 'போக்கு' ஆரோக்கியமில்லை: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 March 2021

அரசின் 'போக்கு' ஆரோக்கியமில்லை: விஜேதாச

 


அரசாங்கத்தின் போக்கு ஆரோக்கியமில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச.


நடைமுறை அரசாங்கத்தில் எதிர்பார்த்த பதவி கிடைக்காத நிலையில் தொடர்ச்சியாக அரசை விமர்சித்து வருகின்ற அவர், ஈஸ்டர் தாக்குதல் 'தவிர்க்கப்பட வேண்டிய' ஒன்றாக இருந்ததனால் தான் நீதியமைச்சராக இருந்த காலத்தில் பல தகவல்களை வெளியிட்டதாகவும் தற்போதைய அரசின் 'முடிவு' என்னவென்று தெரிந்தாலும் அதை வெளிப்படுத்துவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லையெனவும் அதனால் தான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, பெரமுன பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமது கருத்துக்களுக்கு வரவேற்பிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment