இரவில் வீதியில் உலவிய பெண்களுக்கு அபராதம் - sonakar.com

Post Top Ad

Monday 22 March 2021

இரவில் வீதியில் உலவிய பெண்களுக்கு அபராதம்

 


காரணம் எதுவுமின்றி இரவில் வீதியில் உலவிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் நான்கு பெண்களுக்கு தலா 50 ரூபா அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்.


கோட்டை பொலிசாரால் கடந்த 12ம் திகதி கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 1947, 1978ம் வருடங்களின் சட்டத்திற்கமைவாக காரணம் எதுவுமின்றி இவ்வாறு உலவியதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.


இப்பின்னணியில் கோட்டை மஜிஸ்திரேட் பிரியந்த லியனகே இவ்வாறு தலா 50 ரூபா அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment