சர்வதேச சமூகத்துக்கு நேரில் நன்றி தெரிவிப்பு: அசாத் சாலி - sonakar.com

Post Top Ad

Friday 5 March 2021

சர்வதேச சமூகத்துக்கு நேரில் நன்றி தெரிவிப்பு: அசாத் சாலி

 


இலங்கையில் தொடர்ந்த கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் தாம் உட்பட இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக அனுப்பி வைத்த தரவுகளைப் பரிசீலித்து அதற்குத் தகுந்த வகையில் அழுத்தங்களை ஏற்படுத்தி ஜனாஸா எரிப்பினை தடுத்து நிறுத்த உதவிய வெளிநாட்டு பிரதிநிதிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி.


இப்பின்னணியில், தற்சமயம், துருக்கி, அமெரிக்கா, கனடா, மாலைதீவு, எகிப்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதர்களை சந்தித்து இது தொடர்பில் சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்ததாகவும் மேலும் பல சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இலங்கையில் தொடர்ந்த கட்டாய ஜனாஸா எரிப்பு தற்சமயம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்வதாகவும் அவை தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் ஜனாஸா அடக்கம், சுதந்திரமாக நாட்டின் அனைத்து பாகங்களிலும் இடம்பெறுவதற்கான அழுத்தங்கள் அவசியப்படுவதாகவும்  அசாத் சாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது(சோனகர்.கொம்).

No comments:

Post a Comment