அபேசிங்கவுக்கு எதிராக விசாரணை கோரும் பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Sunday, 7 March 2021

அபேசிங்கவுக்கு எதிராக விசாரணை கோரும் பிரசன்ன

 


ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சவுமே என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இது குறித்து விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கடந்த அரசே பொறுப்புதாரிகள் எனவும் தெரிவிக்கின்ற பிரசன்ன, நல்லாட்சியின் அமைச்சர்களும் இன்று கருப்பு ஞாயிறு தினத்தில் கலந்து கொண்டிருப்பது வேடிக்கையானது எனவும் தெரிவிக்கிறார்.


ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கை பிரகாரம் கடந்த அரசாங்கமே பொறுப்புதாரிகள் என தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அபேசிங்க இவ்வாறு தெரிவித்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என பிரசன்ன தெரிவிக்கின்றமையும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை 'சூத்திரதாரிகளை' அடையாளங் காட்டாததனால் நீதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறி கத்தோலிக்கர்கள் இன்று கருப்பு தினம் அனுஷ்டிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment