ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மிகவும் தெளிவானது எனவும் கடந்த அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை கடந்த அரசு புறக்கணித்ததன் ஊடாகவே இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும் அதற்குத் தமது அரசு பொறுப்பில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், நடைமுறையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்கிற அடிப்படையில் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வழங்குவது மாத்திரமே பொறுப்பாகவுள்ளதாகவும் அது நிறைவேற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment