பொன்சேகாவிடம் 1 பில்லியன் கேட்கும் முரளி! - sonakar.com

Post Top Ad

Thursday 25 March 2021

பொன்சேகாவிடம் 1 பில்லியன் கேட்கும் முரளி!வெலிகந்த பகுதியில் 2000 ஏக்கர் நிலத்தைப் பெற்றுக் கொண்டே முத்தையா முரளிதரன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பதாக அண்மையில் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்குப் பகரமாக 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் முரளி.


தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சரத் பொன்சேகா பேசியிருப்பதாகவும் அவரது கூற்றில் எவ்வித உண்மையுமில்லையுமெனவும் சட்டத்தரணிகள் ஊடாக இழப்பீடு கோரியுள்ள அவர், குறித்த தொகையை தரத் தவறினால் சட்ட நடவடிக்கையெடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.


அரசியல் கூட்டமொன்றில் வைத்து சரத் பொன்சேகா கடந்த வாரம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment