போராட்டத்திற்கு போன சுமந்திரனுக்கு STF தேவையில்லை: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 February 2021

போராட்டத்திற்கு போன சுமந்திரனுக்கு STF தேவையில்லை: அமைச்சர்

 தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்ததன் பின்னணியிலேயே விசேட அதிரடிப் படை பாதுகாப்பைப் பெற்றிருந்த சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு விசேட பாதுகாப்பு அவசியமற்றுப் போய் விட்டது என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.


இப்பின்னணியிலேயே சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


பாரிய பொது நிகழ்வில் எவ்வித உயிரச்சுறுத்தலுமின்றி அவரால் பங்கேற்க முடியுமாயின், அதன் பின்னர் இவ்வாறான விசேட பாதுகாப்பு அவசியமற்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment