புலஸ்தினியை 'மூடி' மறைப்பதேன்: அநுர கேள்வி - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 February 2021

புலஸ்தினியை 'மூடி' மறைப்பதேன்: அநுர கேள்வி

  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நிறைவுற்று, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


எனினும், ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுள் ஒருவரின் மனைவியான சாரா புலஸ்தினி என்று அறியப்படும் பெண் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணை இலங்கைக்கு அழைத்து வரவோ அல்லது விசாரிக்கவோ அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


இலங்கை - இந்தியா இடையே பரஸ்பர பேச்சுவார்த்தைகள் அரச உயர் மட்ட விஜயங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இதுவரை இவ்விடயம் மூடி மறைக்கப்படுவதாக அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பல தடவைகள் கேள்வியெழுப்பியும் சபையில் பதில் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment