இரண்டாவது நாளாகத் தொடரும் P2P போராட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday, 4 February 2021

இரண்டாவது நாளாகத் தொடரும் P2P போராட்டம்

 


சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையெனும் இலக்கோடு நடாத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.


காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டிருந்த அதேவேளை மட்டக்களப்பு நகரிலும் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.


ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்து, நீதி எங்கே?, காணாமல் போனதாகக் கூறப்படும் உறவுகள் எங்கே? போன்ற கோசங்களை முன் வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை இது தொடர்பில் சர்வதேச அவதானம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment