இனியும் பிரித்தாள விடக்கூடாது: சுமந்திரன்! - sonakar.com

Post Top Ad

Thursday, 4 February 2021

இனியும் பிரித்தாள விடக்கூடாது: சுமந்திரன்!

 


எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் ஒரே காரணத்துக்காக தமிழ் பேசும் சமூகத்தை பேரினவாதிகள் பிரித்தாள்கின்றனர் என தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்.


கடந்த 73 வருடங்களாகவே அதுவே இந்நாட்டில் நடந்தேறி வருகிறது எனவும் பேரினவாதத்தை மேலோங்கச் செய்து, சிறுபான்மை சமூகங்களை பிரித்தாள்வதற்கு இனியும் அனுமதிக்கக் கூடாது எனவும் இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் வைத்து உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்தார்.


அந்த வகையில் வட-கிழக்கில் வாழும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபடுவதுடன் மலையகத் தமிழ் மக்களும் கை கோர்த்து ஒற்றுமையுடன் திரள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


- ஐ.எல்.எம் நாஸிம் ,சந்திரன் குமணன்

No comments:

Post a Comment