இலங்கை அரசுக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 26 February 2021

இலங்கை அரசுக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் நடைமுறையை அரசாங்கம் கைவிட்டிருப்பதற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.


அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டம் சர்வதேச அளவில் விமர்சனத்துக்குள்ளாகி பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்று வந்தன. இம்ரான் கானிடம் பிரத்தேயகமாக இவ்விடயத்தை புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் எடுத்துச் சென்றிருந்த அதேவேளை, அவரது அண்மைய விஜயத்தின் போது இது குறித்து பேச்சுவார்த்தையும் நடாத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.


இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கவும் பல முஸ்லிம் நாடுகளின் ஆதரவைக் கட்டாயம் பெற்றுக் கொள்ளவும் வேண்டியிருந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென அரசு தமது நிலைப்பாட்டை மாற்றி சுற்று நிருபத்தை வெளியிட்டிருந்தது. கடந்த காலங்களில் தமது பக்க நிபுணர்கi ஆதாரங்காட்டி கட்டாய எரிப்பைத் தொடர்ந்த போதிலும், அது நீக்கப்பட்டமைக்கு எவ்வித விளக்கத்தையும் அரசு வெளியிடாத நிலையில், தொடர்ந்தும் சுற்று நிருபம் மீண்டும் மாற்றப்படுமோ என்கிற சந்தேகமும் நிலவுகின்றமையும் இம்ரான் கான் அதற்கிடையில் நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment