இம்ரானின் வாகனத் தொடரை ஒளிப்பதிவு செய்த நபர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 25 February 2021

இம்ரானின் வாகனத் தொடரை ஒளிப்பதிவு செய்த நபர் கைது

 


இலங்கை விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணித்த வாகனத் தொடரணியை தனது கைத்தொலைபேசியூடாக ஒளிப்பதிவு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


கொழும்பு 08ல் வசிக்கும் குறித்த நபர் பேஸ்புக் ஊடாக அதனை ஒளிபரப்புவதற்காக அவ்வாறு செய்ததாக விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில், கைதான நபரை பொலிசார் பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment