நீதியமைச்சரின் பேச்சால் சங்க சபாக்கள் சீற்றம்! - sonakar.com

Post Top Ad

Sunday 21 February 2021

நீதியமைச்சரின் பேச்சால் சங்க சபாக்கள் சீற்றம்!

 


இலங்கையில் தனியார் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமாயின் அது முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் இலக்கு வைக்காத செயற்பாடாக இருக்க வேண்டும் என அண்மையில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சங்க சபாக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன.


அனைத்த சமூகங்கள் சார்ந்த தனியார் சட்டங்களும் இருப்பதாகவும் அவ்வாறாயின் அவையனைத்தையும் திருத்தியே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நிலைக்கு வர முடியும் எனவும் அத்துராலியே ரதன தேரருக்கு பதிலளித்த நீதியமைச்சர் விளக்கமளித்திருந்தார்.


எனினும், பௌத்தர்களுக்கான பிரத்யேக சட்ட விதிகளை அவ்வாறு தனியார் சட்டங்களுக்குள் அடக்க முடியாது என சங்க சபாக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் சபாநாயகருக்கு இது குறித்த கடிதப் பிரதியை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment