மியன்மாரில் இராணுவ ஆட்சி பிரகடனம் - sonakar.com

Post Top Ad

Monday, 1 February 2021

மியன்மாரில் இராணுவ ஆட்சி பிரகடனம்

 


ஆங் சூ கீயைக் கைது செய்து தடுத்து வைத்துள்ள மியன்மார் இராணுவம் ஒரு வருடத்துக்கு இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் அவசர கால சட்டங்களையும் அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.


இராணுவ ஆட்சியிலிருந்து விடுபடும் நம்பிக்கையில் ஆங் சூ கீயின் கட்டுப்பாட்டிலான அரசுக்கு மக்கள் வாக்களித்திருந்த போதிலும் தொடர்ந்தும் இராணுவ பிடிக்குள்ளேயே மியன்மார் இயங்கி வந்ததுடன் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பையும் மேற்கொண்டிருந்தது.


தற்போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் மியன்மார் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment