வேலை நிறுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை: திலும் - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 February 2021

வேலை நிறுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை: திலும்

 


பேருந்துகளின் இருக்கைகளின் அளவுக்கே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனும் சுகாதார வழி காட்டலுக்கமைவாக இயங்குவதற்கு ஏதுவாக தமக்கு மேலதிக சலுகைகள் அவசியம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


எனினும், அவ்வாறு எதுவும் தரப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், இவ்வாறு போராட்டங்கள் - வேலை நிறுத்தங்கள் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் பேவதாகவும் தேவைப்படின் 'ரூட்' பர்மிட்டினை இரத்து செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஏலவே தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள் பல வழங்கப்பட்டுள்ளதுடன் 20 வீத கட்டண உயர்வுக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.


எனினும், அவ்வாறு எதுவும் தமக்குக் கிடைக்கவில்லையெனவும் இது அப்பட்டமான பொய்யெனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment