மியன்மாருக்கு எதிரான ஐ.நா கண்டனத்தை தடுத்த சீனா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 February 2021

மியன்மாருக்கு எதிரான ஐ.நா கண்டனத்தை தடுத்த சீனா!

 


மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பில் கூட்டு அறிக்கையொன்றை வெளியிடுவதை சீனா தடுத்துள்ளது.


நேற்றைய தினம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பில் கூடி ஆராய்ந்திருந்த நிலையில், தமது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு கூட்டு அறிக்கை வெளியாவதை சீனா தடுத்துள்ளது.


இராணுவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கு 2011ம் ஆண்டு முதல் மியன்மார் முயன்று வருகின்ற அதேவேளை, முதற்தடவையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் தற்போது இராணுவம் செயலிழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment