விமல் வீரவன்ச மன்னிப்பு கேட்க வேண்டும்: பெரமுன விசனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 8 February 2021

விமல் வீரவன்ச மன்னிப்பு கேட்க வேண்டும்: பெரமுன விசனம்!

 


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதி செயலகத்தோடு முடக்கி வைத்திருப்பதாகவும் கட்சித் தலைமையை அவரிடம் கொடுக்க மறுப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு (https://www.sonakar.com/2021/02/blog-post_9.html) வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.


இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர், இது விமல் வீரவன்சவின் மூன்றாந்தர செயல் எனவும் அவர் உடனடியாக அந்தக் கூற்றினை வாபஸ் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


விமல் வீரவன்ச பெரமுன உறுப்பினர் இல்லையெனவும் கூட்டணி உறுப்பினர் மாத்திரமே எனவும் பெரமுன செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment