ஜனாஸா விவகாரம்: நன்றியுடன் நினைவு கூறுவோம்; அசாத் - sonakar.com

Post Top Ad

Friday 26 February 2021

ஜனாஸா விவகாரம்: நன்றியுடன் நினைவு கூறுவோம்; அசாத்

 


இலங்கையில் அமுலில் இருந்த கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக துணிவுடன் விஞ்ஞான ரீதியில் மாற்றுக் கருத்தை முன் வைத்து உலகை சிந்திக்க வைத்த புத்திஜீவிகளின் பங்களிப்பை மறக்கலாகது என தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.


நிபுணர்களின் கருத்தையும் மீறி விடாப்பிடியாக ஜனாஸா எரிப்பைத் தொடர்ந்து வந்த அரசாங்கம் நேற்றைய தினம் அதனை மாற்றிக் கொண்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாயினும் இதற்கான போராட்டம் நீண்டதாக அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கின்ற அவர், இறுதியாக டிசம்பரில் அடக்கம் செய்யவும் அனுமதிக்கும்படி பரிந்துரைத்திருந்த நிபுணர் குழுவின் பங்களிப்பையும் நினைவு கூற வேண்டும் என தெரிவிக்கிறார்.


அந்த வகையில், டொக்டர் பபா பலிஹவதான, டொக்டர் நிஹால் அபேசிங்க, பேராசிரியர்கள் மலிக் பீரிஸ், திஸ்ஸ விதாரன, ரவீந்தர பெர்னான்டோ, வஜிர திசாநாயக்க, ஷெஹான் வில்லியம்ஸ், டொக்டர் பாலித அபேகோன் உட்பட்ட உள்நாட்டு நிபுணர்கள், எம்.ஏ. சுமேந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட்ட ஏனைய கஜேந்திரன் பொன்னம்பலம் உட்பட்ட ஏனைய அனைத்து சமூகங்களையும் சார்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனடா உட்பட்ட வெளிநாடுகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஓ.ஐ.சி, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை, உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பங்கும் எமக்கு நீதியைப் பெற்றுத்தருவதில் பிரதான பங்கினை வகித்தது எனவும் இவர்கள் அனைவருக்கும் முஸ்லிம் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது எனவும் அசாத் சாலி மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment