சுதர்ஷனியை விட்டு ஜெனிபரிடம் கேளுங்கள்: பேராசிரியர் நலின் - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 January 2021

சுதர்ஷனியை விட்டு ஜெனிபரிடம் கேளுங்கள்: பேராசிரியர் நலின்

 


அண்மையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவை நியமித்தது யார்? என்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.


இது தொடர்பில் அவரது பேச்சைக் கேட்பதை விடுத்து நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் ஜெனிபர் பெரேராவை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லையென வினவியுள்ளார் பேராசிரியல் நலின் டி சில்வா.


கட்டாய எரிப்புக்கான முதலாவது சுற்று நிருபம் வெளியிட்ட போது, போதிய விஞ்ஞான அறிவு இல்லையெனக் கூறியவர்கள் இப்போது எந்த அளவு அறிவைப் பெற்றுள்ளார்கள்? என்றும் விளக்க வேண்டும் என தெரிவித்துள்ள பேராசிரியர், போகிற போக்கில் தினசரி ஒரு சுற்று நிருபத்தை வெளியிட்டு அதனை இராணுவ தளபதியைக் கொண்டு வாசிக்க வைக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதை விடுத்து, நிபுணர் குழுவை நியமித்தது யார்? என கண்டறிவதற்கு புதிய குழுவை நியமிக்கும் கேலிக் கூத்துக்கு முடிவு கட்டி பவித்ரா - சுதர்ஷனி கலந்துரையாடி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment