கொரோனா தொற்று எப்போது, யாருக்கு வரும் என்றில்லையெனவும் அவ்வாறு தொற்றுக்குள்ளான ஒருவரை, குறிப்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சமூக வலைத்தளங்களில் பெருமளவு நையாண்டி செய்து வருவது தமக்கு அதிருப்தியளிப்பதாகவும் தெரிவிக்கிறார் கொரோனா அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே.
தம்மிகவின் கொரோனா பானியை விளம்பரப்படுத்தியதன் பின்னணியில் சமூக மட்டத்தில் பாரிய அதிருப்தியை சம்பாதித்திருந்த நிலையில் பவித்ரா தொற்றுக்குள்ளானமை இவ்வாறு அவரை கேலிப் பொருளாக மாற்றியுள்ளது.
இருப்பினும், தொற்றுக்குள்ளான ஒருவருக்கு எதிராக கருத்துரைப்பது தமக்கு அதிருப்தியளிப்பதாக தெரிவித்துள்ள சுதர்சனி, விசேட வைத்திய நிபுணர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் எனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment