யாழ்: நினைவுத் தூபியை மீண்டும் நிறுவ நடவடி க்கை! - sonakar.com

Post Top Ad

Monday, 11 January 2021

யாழ்: நினைவுத் தூபியை மீண்டும் நிறுவ நடவடி க்கை!


முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த  மக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நினைவுத்தூபியை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் வட - கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அதேவேளை யாழ் பல்கலை மாணவர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இப்பின்னணியில் இன்று அதிகாலை உண்ணாவிரதத்திலிருக்கும் மாணவர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் இவ்வாக்குறுதியை வழங்கியுள்ளார்.


இதன் தொடர்ச்சியில் அடிக்கல் நடப்பட்டு, மாணவர்களின் உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


No comments:

Post a Comment