பவித்ரா பானியை குடித்த முறை தவறு: தம்மிக - sonakar.com

Post Top Ad

Saturday, 23 January 2021

பவித்ரா பானியை குடித்த முறை தவறு: தம்மிக

 தனது கொரோனா பானியை சுகாதார அமைச்சர் குடித்த முறை தான் தவறு என்கிறார் கேகாலை தம்மிக்க பண்டார.


அத தெரண உதவியுடன் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற அதிசய மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக விளம்பரப்படுத்திய தம்மிக அதனை அரசின் முக்கிய நபர்களுக்கு அருந்தக் கொடுத்திருந்தார்.


முதலில் இதற்கு விளம்பரம் வழங்கிய சுகாதார அமைச்சருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தனது மருந்தை உரிய அளவில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப உபயோகப்படுத்தியிருந்தால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது என்று தம்மிக தெரிவிக்கிறார்.


எனினும், இதே பானியை அருந்திய பியல் நிசந்தவுக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment