நிபுணர் குழுவில் பெரும்பான்மையானோர் அடக்கத்துக்கு ஆதரவு - sonakar.com

Post Top Ad

Friday, 1 January 2021

நிபுணர் குழுவில் பெரும்பான்மையானோர் அடக்கத்துக்கு ஆதரவு

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைவாக அடக்கம் செய்ய அல்லது எரிப்பதற்கு அனுமதிக்கலாம் என அரசினால் அண்மையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.


குறித்த குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானோரின் நிலைப்பாடு இதுவாக இருக்கின்ற அதேவேளை முன்னர் எரிப்பு மட்டுமே நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது என்ற கருத்தினை முன் வைத்து தொடர்ச்சியாக கட்டாய ஜனாஸா எரிப்புக்கு வழி வகுத்த நிபுணர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தயாரில்லையென சோனகர்.கொம்முக்கு தகவல் கிடைத்துள்ளது.


அறிக்கை ஏலவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான முடிவொன்றை விரைவில் எதிர்பார்க்கலாம் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அரசின் முடிவுகள் அரசியல் பின் விளைவுகளை உருவாக்கும் என்பதும் அண்மையில் நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment