அடுத்த முறையும் கோட்டா ஜனாதிபதியாக வேண்டும்: பந்துல - sonakar.com

Post Top Ad

Tuesday 19 January 2021

அடுத்த முறையும் கோட்டா ஜனாதிபதியாக வேண்டும்: பந்துல

 


கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி தன்னிறைவடைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப பாடுபடும் கோட்டாபே ராஜபக்ச மீண்டும் அடுத்த தடவையும் ஜனாதிபதியாக வேண்டும் என்று தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


பொதுஜன பெரமுன இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வைத்து உரையாற்றுகையிலேயே பந்துல இவ்வாறு தெரிவித்துள்ளார்.


உலகமெல்லாம் தினசரி பல ஆயிரம் பேர் மரணிக்கின்ற போதிலும் இலங்கையில் அதனை வெகுவாகக் கட்டுப்படுத்துமளவுக்கு ஜனாதிபதி திட்டமிட்டு செயற்பட்டுள்ளதாக பந்துல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment