உக்ரைனியர்களால் கழுவப்படும் தலதா மாளிகை: தேரர் விசனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 11 January 2021

உக்ரைனியர்களால் கழுவப்படும் தலதா மாளிகை: தேரர் விசனம்!

 


தீவிர கொரோனா பரவலினால் லொக்டவுன் செய்யப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்துள்ள உதயங்க வீரதுங்க, சுற்றுலாத்துறைக்கே தெரியாத இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.


இப்பின்னணியில், இன்றைய தினம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தலதா மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து பிரதேசத்தின் முக்கியஸ்தரான லேவல்லே தர்மாலங்கார தேரர் தெருவில் இறங்கி விசனம் வெளியிட்டுள்ளார்.


தான் எந்த அமைப்பையும் சேர்ந்தவரில்லையெனவும் உக்ரைனியர்களை உள் நுழைய அனுமதித்து விட்டடு தலதா மாளிகையைக் கழுவிக் கொண்டிருப்பதாகவும் இவையனைத்தும் திருட்டுத் தனமாகவே நடந்திருப்பதாகவும் பாதுகாப்பு ஆடைகள் எதுவுமின்றியே சாரதிகள் வருவதாகவும் சுட்டிக்காட்டி அவர் விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment