ஜனாஸா எரிப்பு: அலுத்துப் போன அலிசப்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

ஜனாஸா எரிப்பு: அலுத்துப் போன அலிசப்ரி!

 


கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்துவதற்கு ஆட்சியாளர்கள் மத்தியில் தன்னால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்ட நீதியமைச்சர் அலி சப்ரி இவ்விவகாரத்தில் அலுத்துப் போயுள்ளதாக அறியமுடிகிறது.


முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் அவரால் அவரது சமூகத்துக்குக் கூட நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லையென எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்ற அதேவேளை, கட்டாய எரிப்புக்கான முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லையென சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


டிசம்பர் இறுதியில் இது தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான பரிந்துரையை வழங்க பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, அடக்கம் செய்வதையும் அனுமதிக்கலாம் என தெரிவித்திருந்தும் கூட, அரசு அதனைப் புறந்தள்ளியுள்ளதுடன் முன்னைய முடிவை மாற்றப் போவதில்லையென தெரிவித்துள்ளது. எனினும், நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பியதை சமாளிக்க, ஜெனிபர் பெரேரா குழுவின் பரிந்துரைகளை பழைய குழு மீளாய்வு செய்து கொண்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து பதில் கிடைத்ததும் நாடாளுமன்றில் அறிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனினும், சன்ன பெரேரா தலைமையிலான குழு ஏலவே எதிர் நிலைப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அரச மட்டத்தில் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வந்த அலி சப்ரி அதிருப்தியில் இருப்பதாக அறியமுடிகிறது (சோனகர்.கொம்). 

No comments:

Post a Comment