கோட்டாவின் மிரட்டல்: ஹரின் பொலிசில் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 January 2021

கோட்டாவின் மிரட்டல்: ஹரின் பொலிசில் முறைப்பாடு!

 


தனக்கு இரு வேறு முகங்கள் இருப்பதாகவும் பௌத்த துறவிகள் தனது பழைய முகமான பாதுகாப்பு செயலாளரின் முகத்தையே வேண்டுவதாகவும் தெரிவித்து, ஹரின் பெர்னான்டோ நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக ஜனாதிபதி தெரிவித்தவை தன் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரி முறைப்பாடொன்றை செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ.


அம்பாறையில் வைத்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனது பேச்சு சுதந்திரத்துக்கும் எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், நாயைக் கொல்வது போல கொல்லவும் தன்னால் முடியும் என தெரிவித்திருப்பதானது தனக்கு பாரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் என்ற பொறுப்பிலிருந்து  சி.டி விக்ரமரத்ன தனது கடமையைச் செய்ய வேண்டும் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment