கட்டாய இராணுவ பயிற்சி கட்டுப்படியாகாது: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Friday 22 January 2021

கட்டாய இராணுவ பயிற்சி கட்டுப்படியாகாது: பொன்சேகா

 


18 வயது பூர்த்தியடைந்ததும் அனைத்து இளைஞர்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சியை வழங்குவதற்கான திட்டம் அண்மையில் அமைச்சர் சரத் வீரசேகரவினால் முன்மொழியப்பட்டிருந்தது.


எனினும், அது நாட்டின் பொருளாதாரத்துக்குக் கட்டுப்படியாகாத விடயம் என தெரிவிக்கிறார் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா.


ஆறு மாத காலத்துக்கு ஒருவருக்கான பயிற்சி செலவு 750, 000  ரூபா எனவும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கே மேலதிகமாக 75 பில்லியன் அவசியப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment