தடுப்பூசி; சுகாதார ஊழியர்களுக்கே முன்னுரிமை: பவித்ரா - sonakar.com

Post Top Ad

Friday, 8 January 2021

தடுப்பூசி; சுகாதார ஊழியர்களுக்கே முன்னுரிமை: பவித்ரா

 


 இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கப் பெற்றதும் முதலில் 155,000 சுகாதார ஊழியர்களுக்கே அது வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.


அதற்கடுத்ததாக முப்படையைச் சேர்ந்த 127,500 பேருக்கும், அதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட 3.1 மில்லியன் பேருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு பணியாளர்களுடன் தொடர்புபட்டு பணியாற்றுபவர்கள், சுகயீனமுற்றிருக்கும் 18 - 59 வயதுக்குட்பட்டோர், அதன் பின் 40 - 59 வயதுக்குட்பட்டோர் என பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை ஏலவே பவித்ரா வன்னியாராச்சி கேகாலை தம்மிக்கவின் பானியை சந்தைப்படுத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment