20க்கு வாக்களித்த போது ஏன் 'இனவாதம்' பேசவில்லை: அநுர கேள்வி! - sonakar.com

Post Top Ad

Friday 8 January 2021

20க்கு வாக்களித்த போது ஏன் 'இனவாதம்' பேசவில்லை: அநுர கேள்வி!

 


20ம் திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த போது, அவர்களது பெயர்களுக்கு அருகில் பச்சை விளக்கு எரிந்த போது கூடிக் குளாவிய ஆளுங்கட்சியினர் அது தவிர்ந்த விடயங்களில் முஸ்லிம்கள் பேச வந்தால் அதனை இனவாதம் என வர்ணிப்பது எவ்வகையில் தகும்? என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


கட்டாய எரிப்பின் பின்னணியில் ஒரு சமூகம் பாதிக்கப்படுகிறது, கவலை கொண்டுள்ளது என்றால் அந்த சமூகத்தின் நலன் குறித்தும் ஆரம்பத்திலேயே ஆராய்ந்து, கலந்துரையாடி அவர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தீர்வொன்றை வழங்கியிருக்க வேண்டியது அரசின் கடமையெனவும் தனதுரையின் போது தெரிவித்த அவர், அரசு இப்போது பேசும் இன - மத பேதங்கள் அரசியலுக்காகவே திணிக்கப்படுகின்றன எனவம் இந்நிலை தொடரக்கூடாது எனவும் தெரிவித்தார்.


தனிச் சிங்கள அரசினை அமைக்கப் போவதாக தெரிவித்த மஹிந்த அணி, ஈற்றில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடனேயே நாடாளுமன்ற பெரும்பான்மையை நிறுவியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment