நீதியமைச்சரின் முடிவை மீளாய்வு செய்ய கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 14 January 2021

நீதியமைச்சரின் முடிவை மீளாய்வு செய்ய கோரிக்கை

 


சட்டத்தரணிகள் 150 பேரை ஸ்ரீலங்கா பொலிசில் பிரதம ஆய்வாளர்களாக இணைத்துக் கொள்வதற்கான நீதியமைச்சர் அலி சப்ரியின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.


அரசு சார்பில் வழக்குகளில் ஆஜராவதற்கு சட்டமா அதிபர் அலுவலகம் ஊடாக ஏலவே சட்டத்தரணிகள் பணியாற்றி வரும் நிலையில் பொலிசார் மேற்கொள்ளும் விசாரணைகளில் இதுவரை தலையிட்டதில்லையெனவும் இதனூடாக நடைமுறை சிக்கல்கள் வரலாம் எனவும் அச்சங்கம் தெரிவிக்கிறது.


இந்நிலையில், இம்முடிவு குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையடி தீர்மானிக்க வேண்டும் எனவும் நீதியமைச்சர் அவ்வாறு செய்யவில்லையெனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment