21ம் திகதி முதல் நாடு 'திறக்கப்படும்' : பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Thursday, 14 January 2021

21ம் திகதி முதல் நாடு 'திறக்கப்படும்' : பிரசன்ன

 


உக்ரைனிலிருந்து பரீட்சார்த்தமாக சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கின்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்வரும் 21ம் திகதி முதல் அனைத்து நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதியளிக்கப் போவதாக தெரிவிக்கிறார்.


ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைனியர்கள் வந்த போதிலும் அதில் மிகச் சிலருக்கே கொரோனா தொற்று இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.


இந்நிலையிலேயே, அனைத்து நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் நாடு திறக்கப்படும் எனவும் தற்போதைய 'புதிய' சூழ்நிலையுடன் மக்கள் வாழப் பழக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment