அட்டுலுகம: PHI மீது 'துப்பியதாக' சர்ச்சை! - sonakar.com

Post Top Ad

Thursday, 3 December 2020

அட்டுலுகம: PHI மீது 'துப்பியதாக' சர்ச்சை!

 


அட்டுலுகமயில் கொரோனா சூழ்நிலையில் பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் சுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பியதாகவும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன.


கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர் ஒருவரை, சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முயன்ற போது அதனை எதிர்த்த நபர், அதிகாரிகள் வாகனத்தில் ஏறி திரும்புவதற்கு ஆயத்தமான நிலையில் வாகனத்தின் கதவைத் திறந்து இவ்வாறு துப்பியதுடன் எல்லோருக்கும் கொரோனா வரட்டும் என தெரிவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


எனினும், குறித்த காணொளியில் நீங்கள் பணம் பறிப்பதற்கு முயற்சிக்கிறீர்கள் என்றும் குறித்த நபர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment