போதைப் பொருள்; அரசு மக்களை ஏமாற்றுகிறது: பண்டார! - sonakar.com

Post Top Ad

Thursday, 3 December 2020

போதைப் பொருள்; அரசு மக்களை ஏமாற்றுகிறது: பண்டார!

 நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார.


பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில் மீண்டும் போதைப் பொருள் விநியோகம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், அரசின் முக்கியஸ்தர்கள் தற்காலத்தில் பொலிசாரைக் கட்டுப்படுத்துவதாகவும் இதனால் மணல் கொள்ளை, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தனது இன்றைய நாடாளுமன்ற உரையில் அவர் தெரிவித்துள்ளார்.


2009ல் மஹிந்த அரசு 29 கிலோவைக் கைப்பற்றியிருந்தது,  2011ல் 31 கிலோ , 2012ல் 181 கிலோ என்பதே கடந்த காலத்தில் மஹிந்த அரசு கைப்பற்றிய போதைப் பொருளின் அளவுகள் எனவும்  2016ல் கூட்டாட்சியினர்  196 கிலோவைக் கைப்பற்றியிருந்த அதேவேளை, 2019 அளவில் ஹெரோயின் மாத்திரம் 1741 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் சுயாதீனமாக இயங்கியதே அதற்கான காரணம் எனவும் பண்டார மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment