கைவிடப்படும் ஜனாஸாக்களை அரச செலவில் எரிக்க உத்தரவு - sonakar.com

Post Top Ad

Tuesday 1 December 2020

கைவிடப்படும் ஜனாஸாக்களை அரச செலவில் எரிக்க உத்தரவு

 



கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவோரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படுவதோடு அதற்கு 58000 ரூபா கட்டணமும் அறவிடப்படும் நிலையில் முஸ்லிம் சமூகம் ஜனாஸாக்களை  கைவிடும் நூதன போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.


கொழும்பு மற்றும் கண்டியிலும் உடலங்கள் இவ்வாறு தேங்கியிருக்கும் நிலையில் தற்போது அவ்வாறு கைவிடப்படும் உடலங்களை அரசாங்க செலவிலேயே எரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் பின்னணியில் ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment