அலி சப்ரிக்கு எதிராக சிங்ஹல ராவய முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 December 2020

அலி சப்ரிக்கு எதிராக சிங்ஹல ராவய முறைப்பாடு

 


இலங்கையின் கொரோனாவால் உயிரிழப்போரின் உடலங்களைத் எரிப்பதே அரசின் முடிவாக இருக்கும் நிலையில் அதற்கெதிராக பேசி வருவதாக நீதியமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது சிங்ஹல ராவய கடும்போக்கு அமைப்பு.


உலகில் எங்கும் இல்லாத வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு முஸ்லிம் இளைஞர்களை தீவிரப் போக்குக்குத் தள்ளிவிடக் கூடியது என அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அலி சப்ரி இடையூறாக இருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment