பரவி வரும் வெள்ளைத் துணி போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 December 2020

பரவி வரும் வெள்ளைத் துணி போராட்டம்!

 


ஜனாஸா எரிப்புக்கு எதிரான அஹிம்சாவழி எதிர்ப்புப் போராட்டமாக உருவெடுத்துள்ள வெள்ளைத் துணி போரோட்டம் நாட்டின் பல பாகங்களையும் எட்டியுள்ளது.


நேற்றைய தினம் பொரள சவச்சாலையில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கை கிழக்கின் நகரங்களுக்கும் பரவியுள்ளதுடன் பல இடங்களில் வீடுகள் - கடைகள் மற்றும் வாகனங்கள், வீட்டுக்கதவுகளிலும் மக்கள் இவ்வாறு வெள்ளைத் துணிகளை கட்டித் தொங்க விட்டுள்ளனர்.


20 நாள் குழந்தையின் உடலம் எரிக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் பலத்த கண்டனங்களை உருவாக்கியுள்ளதுடன் அஹிம்சாவழி போராட்டங்களையும் தூண்டி விட்டுள்ளது. அந்த வகையில், முடிந்தவர்கள் தமது வீடுகளில் இவ்வாறான அடையாள எதிர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment