ஜனாஸாவை எரிக்காது 'பாதுகாக்குமாறு' நீதிமன்றம் உத்தரவு - sonakar.com

Post Top Ad

Monday, 21 December 2020

ஜனாஸாவை எரிக்காது 'பாதுகாக்குமாறு' நீதிமன்றம் உத்தரவு

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் ஜனாஸாவை எரியூட்டுவதை அனுமதிக்கவோ எரியூட்டுவதென்றால் உடலத்தை பொறுப்பேற்கவோ முடியாதென தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், இது குறித்து ஆராயும் நிபுணர் குழு முடிவெடுக்கும் வரையில் ஜனாஸாவை குளிரூட்டியில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டுள்ளது காலி நீதிமன்றம்.


காலி, தொடுகல பகுதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான முஸ்லிம் நபர் ஒருவரது ஜனாஸாவை குடும்பம் பொறுப்பேற்க மறுத்ததன் பின்னணியில் பிரதேச மரண அதிகாரியினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், நிபுணர் குழு தமது இறுதி முடிவினை அறிவிக்கும் வரை உடலை எரியூட்ட அனுமதிக்கக் கூடாது என உறவினர்கள் வாதாடியிருந்தனர்.


இப்பின்னணியிலேயே காலி கூடுதல் மஜிஸ்திரேட் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளமையும் தற்போது கைவிடப்பட்டுள்ள முஸ்லிம் ஜனாஸாக்களை வைத்துப் பாதுகாக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட கன்டைனர்களைத் தருமாறு சுகாதார பணிப்பாளர் அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment