மாலைதீவில் முடியுமென்றால் ஏன் இங்கு முடியாது? அலி சப்ரி! - sonakar.com

Post Top Ad

Wednesday 16 December 2020

மாலைதீவில் முடியுமென்றால் ஏன் இங்கு முடியாது? அலி சப்ரி!

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜனாஸாக்களை மாலைதீவுக்கு அனுப்பி அடக்கம் செய்ய கோர முடியுமென்றால் ஏன் இலங்கையில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என கேள்வியெழுப்பியுள்ளார் அலி சப்ரி.


இலங்கையிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்களின் செலவில் ஜனாஸாக்களை மாலைதீவுக்கு அனுப்புவதற்கான மாற்று யோசனையொன்று ஆலோசிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச மாலைதீவு அரசிடம் இதற்கான அனுமதி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதனை பரிசீலிப்பதாக மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டிருந்த போதிலும் அந்நாட்டில் இது தொடர்பில் பாரிய எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Suhood MIY said...

It's true that Ali Sabry doesn't become a politician because of Muslims votes. But he also has the responsibility to safeguard the Muslim communities' rights as being a member of the Government side. Otherwise, history might say something wrong in the future that all what spoke about all against Muslim citizens with the support of Ali Sabry.

Post a Comment