இலங்கை முஸ்லிம்கள் விரும்பாத செயல்: மாலைதீவில் எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 December 2020

இலங்கை முஸ்லிம்கள் விரும்பாத செயல்: மாலைதீவில் எதிர்ப்பு!இலங்கையிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவுக்கு நாடு கடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு மாலைதீவு அரசு ஆதரவளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் சமூக அமைப்புகள் நேற்றைய தினம் மாலைதீவு தூதரகம் ஊடாக அந்நாட்டு ஜனாதிபதியை வலியுறுத்தி வேண்டுகோள் ஒன்றினை அனுப்பியிருந்தன.


இந்நிலையில், குறித்த விவகாரம் அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளதுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சமய ரீதியிலான ஆளுமையுள்ள அதாலத் கட்சி உட்பட முக்கிய தளங்களில் இலங்கை முஸ்லிம்களின் நியாயபூர்வமான கோரிக்கை, தமது சொந்த நாட்டிலேயே அடக்கம் செய்ய அனுமதியைப் பெறுவதுதானன்றி வெளிநாட்டுக்கு ஜனாஸாக்களை அனுப்புவதில்லையென தேசிய மட்டத்தில் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.


இது தொடர்பில் முன்னாள் உப ஜனாதிபதி ஜமீல் அஹமத் இன்றைய தினம் சோனகர்.கொம்டன் உரையாடிய போது விளக்கமளித்திருந்த அதேவேளை, பொருளாதார சிக்கலில் தவிக்கும் அரசு, சீன - இந்திய ஆளுமைக்குட்பட்டு தவறான பல முடிவுகளை எடுத்து வருவதாகவும் இந்த விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் அபிலாஷையே மாலைதீவு மக்களின் அபிலாஷையும் என தெளிவுபடுத்தினார்.


இதேவேளை, இன்றைய தினம் GCSM அமைப்பும் மாலைதீவு ஜனாதிபதிக்கு இலங்கையில் இடம்பெறும் ஜனாஸா அரசியல் மற்றும் சூழ்ச்சிகளையும் உரிமைகளையும் விளக்கி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment