சிசு வியாபாரம்: சந்தேக நபருக்கு பிணை - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 December 2020

சிசு வியாபாரம்: சந்தேக நபருக்கு பிணை

 


பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களை சம்மதிக்க வைத்து புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 4ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு, குறித்த நபருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.


சுமார் 30 கைக்குழந்தைகள் இந்நபரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment