கட்டாய எரிப்பை மீளாய்வு செய்யக் கோரி கடிதம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 27 December 2020

கட்டாய எரிப்பை மீளாய்வு செய்யக் கோரி கடிதம்!

 


நாட்டில் அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பை மீளாய்வு செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது அமரபுர - ராமான்ய நிக்காயங்கள் இணைந்தியங்கும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு.


இக்கடிதத்தினூடாக வைரஸ் நிபுணர்கள், வைத்தியர்கள், சமய தலைவர்களும் அடங்கலான குழுவொன்றை நியமித்து இவ்விவகாரத்துக்கு சாதகமான தீர்வொன்றைக் காணுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் கொங்கிறீட் புதைகுழிகளில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.


குறித்த கடிதத்தில் மத நல்லிணக்க  குழுவில் பங்கேற்கும் கிறிஸ்தவ, இந்து சமய மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment