குழந்தையை அவசரமாக எரித்ததில் சந்தேகம்: வழக்குத் தாக்கல் - sonakar.com

Post Top Ad

Thursday, 24 December 2020

குழந்தையை அவசரமாக எரித்ததில் சந்தேகம்: வழக்குத் தாக்கல்

 


அண்மையில் பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறி அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் பெற்றோர் சார்பில் அடிப்படை உரிமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வைத்தியசாலை அதிகாரிகள் அலட்சியம், இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை நடாத்த அனுமதி மறுப்பு மற்றும் எரிப்பதில் காட்டிய அவசரம் என பல்வேறு சந்தேகங்கள் தமக்கிருப்பதாக பெற்றோர் தரப்பிலிருந்து காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், முழுமையான நீதிபதிகள் குழு இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த தடவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினரே ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்குகளை பரிசீலித்திருந்த அதேவேளை  2:1 என்ற அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment