நிபுணர் குழுவின் முடிவுக்கு மறு பேச்சு இல்லை: இ.தளபதி - sonakar.com

Post Top Ad

Monday, 28 December 2020

நிபுணர் குழுவின் முடிவுக்கு மறு பேச்சு இல்லை: இ.தளபதி

 


கொரோனா உடலங்கள் தொடர்பில் நிபுணர் குழுவின் முடிவுக்கு மறு பேச்சு இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.


உலகில் எங்குமே இல்லாத, நிரூபிக்கப்படாத விஞ்ஞானத்தின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் எரிக்கப்பட்டு வரும் நிலையில் நிபுணர் குழு இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், குறித்த குழு தொடர்பில் பாரிய சந்தேகங்களும் அதிருப்தியும் வெளியிடப்பட்டு வருவதுடன் அக்குழுவில் மேலும் சுயாதீன நிபுணர்களையும் சேர்நத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில் இராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளதோடு அனைத்து தரப்பினரும் அம்முடிவினை ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment